சீனாவின் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பீஜிங்கில் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ரயில் மற்றும் பஸ் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 300ற்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன.
வாகனங்கள், கடைகள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே பலத்த சூறாவளி காற்று வீசி வருவதினால் உடல் எடை 50 கிலோவுக்கும் குறைவானவர்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
link: https://namathulk.com/