யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர், 5 படகுகளுடன் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று குறித்த 13 பேரும் கைதாகினர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் குறித்த சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சட்டவிரோத சுருக்குவலை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மீறி பயன்படுத்துவோர் தொடர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்படுவார்கள் என வெற்றிலைக்கேணி கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com/