சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 400ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நம்பகமான ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை இதனை தெரிவித்துள்ளது.
சூடான் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட டார்ஃபர் மாநிலத்தின் தலைநகரை மீட்கும் முயற்சியில் துணை இராணுவப்படையினர் அண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்படி, டார்ஃபர் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது துணை இராணுவப்படையினர் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல்கள் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/