குறைந்த தேவை காரணமாக இன்று முதல் 30 – 35 சதவீத தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
சுமார் 5,000 தனியார் பஸ்கள் மட்டுமே இன்று இயக்கப்படுகின்றன என விஜேரத்ன குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தமிழ்,சிங்கள புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கொழும்புக்குத் திரும்பும் மக்களின் வசதிக்காக இன்று முதல் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
link: https://namathulk.com/