நுவரெலியா பஸ் நிலையத்தில் போதுமான பஸ் வசதி இல்லாததால் பயணிகள் அவதி.

Aarani Editor
1 Min Read
BusShortage

நுவரெலியா பஸ் நிலையத்தில் இருந்து குறுகிய தூர பஸ் வசதி இல்லாததால் இன்று பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு தொழில் நிமித்தம் வருபவர்கள் என பலரும் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

மேலும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக நுவரெலியாவிலிருந்து விசேட பஸ் சேவை இயக்கப்படுகின்ற போதிலும் நுவரெலியா பஸ் நிலையத்தில் இருந்து குறுகிய தூர பஸ் வசதி இல்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் போக்குவரத்து சேவைகள் சீராக இல்லாத காரணத்தினால் சரதிகளுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது.

நுவரெலியாவில் இருந்து குறுகிய தூர பஸ் போதிய அளவில் இல்லாமையால் பஸ் தரிப்பிடத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

இதனால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாக நேரிட்டிருப்பதாகப் பலரும் கூறுகின்றார்கள்.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *