பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு அனுமதி மறுப்பு.

Aarani Editor
1 Min Read
Ranil

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து, உரிய வாய்ப்பை கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.

காவலில் உள்ள ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் பேசுவது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இருப்பினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வழக்கறிஞராகச் செயல்படும் உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புவதாகக் கூறி கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, உதய கம்மன்பிலவுக்கு சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதிகாரிகள் முன்னிலையிலும் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிவநேசதுரை சந்திரகாந்தனை கடந்த 8 ஆம் திகதி கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றம் அவரை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *