கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு உத்தியோத்தர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பதில் நீதிவான் சிவபால சுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பாலியல் துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு உத்தியோத்தர் மீது பொலிசாரால் சிறுவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் படி 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 12 முறைப்பாடுகள் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாகவும், 04 முறைப்பாடுகள் விளையாட்டு உத்தியோகத்தர் மாணவர்களுக்கு தாக்கியமை தொடர்பிலும் பதிவுச் செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த நபரை எதிர்வரும் மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
link: https://namathulk.com/