230 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துக் குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 23 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Link: https://namathulk.com/