அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கும் அபாயம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இதனை கூறினார்.
இதன்போது, இந்த விடயத்தினை அவசரநிலையாகக் கருத வேண்டும் எனவும், புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், கடன் வாங்கும் தொகை அதிகரிக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் குறையக்கூடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Link: https://namathulk.com/