ஈபிடிபியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வேட்பாளர்களை கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இன்று (15) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுமாயின் தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் காலங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது அவதூறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com/