உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக 168 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் 36 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 132 முறைப்பாடுகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், இதுவரையில், 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com/