உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தாக்குதல்கள் உள்ளிட்ட ஏனைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20ஆம் திகதி முதல் இன்று வரை 1,387 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/