ஊழியர் சேமலாப நிதியம் ஓய்வுகால நிதியத்துறையில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது – மத்திய வங்கியின் அறிக்கை.

Aarani Editor
1 Min Read
ஊழியர் சேமலாப நிதியம்

ஊழியர் சேமலாப நிதியம் ஓய்வுகால நிதியத்துறையில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி 2024இன் இறுதியில் அத்துறையின் மொத்த சொத்துக்களில் 81.0 சதவீதத்தினை கொண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட 2024 ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் தேறிய பெறுமதி 2023 இறுதியில் பதிவு செய்யப்பட்ட 3,886.7 பில்லியனிலிருந்து 2024 இறுதியில் 4இ375.7 பில்லியன் ரூபாவிற்கு ஆண்டிற்காண்டு அடிப்படையில் 12.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது.

நிதியத்தில் ஏற்பட்ட இவ்வளர்ச்சிக்கு முதலீடுகளூடாக உருவாக்கப்பட்ட வருமானமும் 2024இல் செய்யப்பட்ட நேர்க்கணியமான தேறிய பங்களிப்புகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன.

இச்சமகாலத்தில் உறுப்பினர்களுக்கான மொத்தப் பொறுப்புக்கள், இக்காலப்பகுதியில் 12.4 சதவீதத்தினால் அதிகரித்தன.

2024ஆம் ஆண்டிற்காக பெறப்பட்ட மொத்தப் பங்களிப்புக்கள் 11.3 சதவீதத்தினால் 234.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகரித்த வேளையில் உறுப்பினர்களுக்கும் அவர்களது சட்டபூர்வ வாரிசுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட மீளளிப்பின் மொத்தத் தொகை 188.1 பில்லியனன் ரூபாவிற்கு 12.9 சதவீதத்தினால் குறைவடைந்தது.

நிதியத்தின் தேறிய பங்களிப்பானது 2023இல் அறிக்கையிடப்பட்ட ரூ.5.3 பில்லியன் கொண்ட ஓர் எதிர்மறையான பங்களிப்புடன் ஒப்பிடுகையில் 2024இல் 46.3 பில்லியன் ரூபா கொண்ட ஒரு நேர்க்கணிய பங்களிப்பை பதிவு செய்தது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *