நாட்டின் பல பகுதிகளில் நாளையதினம் (17) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Link: https://namathulk.com/