இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.யு.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/