தம்புள்ளை விவசாய களஞ்சியம் ஏன் செயல்படவில்லை – ஹர்ஷ டி சில்வா கேள்வி.

Aarani Editor
1 Min Read
HarshaDeSilva

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய களஞ்சியம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது, ஆனால் இன்னும் செயல்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ் சாட்டியுள்ளார்.

நேற்று அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், தற்போதைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவசாய சேமிப்பு களஞ்சிய வளாகம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் ஹர்ஷ டி சில்வா பொருளாதார சீர்திருத்த அமைச்சராகப் பதவி வகித்தபோது, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த 5,000 மெட்ரிக் தொன் கொள்ளளவுடன் தம்புள்ளை விவசாய களஞ்சிய கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டதாக பாராளுமன்ற அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, ​​இந்த வளாகம் 5 ஆம் திகதி ஒன்லைனில் திறக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று தம்புள்ளை விவசாய களஞ்சிய வளாக பகுதிக்கு சென்று அதன் தற்போதைய நிலை குறித்து பார்வையிட்டார்.

அப்போது, வளாகத்தின் நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் தனது பேஸ்புக் கணக்கில் நேரடி வீடியோவை ஒன்றையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *