அரசியற் களத்தின் உள்ளும் புறமும் எத்தனை பெரும் சவால்கள் வந்தாலும், இலக்கு நோக்கிய எம் பாதையும், பயணமும் அறம்சார்ந்ததாக அமையுமானால் அடையவேண்டிய அரசியல் உரித்துகளை அடைந்தே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (15) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வாலிபர் முன்னணித் தலைவரும், வேட்பாளருமான குணபாலசிங்கம் குணராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்திர் கட்சியின் மூத்த உறுப்பினரும், வேட்பாளருமான கணேசு துரைலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும் வேட்பாளருமான அருணாசலம் வேழமாலிகிதன், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Link: https://namathulk.com/