கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் இன்று நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.
ஆசிர்வாத பிரித் பாராயண நிகழ்வைத் தொடர்ந்து காலை 9.04 மணி சுப நேரத்தில், விகாரையின் தலைமை விகாராதிபதி சங்கைக்குரிய கொலன்னாவே தம்மிக்க தேரரின் தலைமையில், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது நிகழ்வுக்கு வருகைதந்திருந்த பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் பிரதமர் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல. உண்மையான அபிவிருத்திக்கு எமது ஆன்மீகம், உறவுகள் மற்றும் பிணைப்புகள் அனைத்தும் முக்கியமானவை என பிரதமர் கூறினார்.
இத்தகைய பண்டிகைகளின் போது அவற்றை எமக்கு நினைவூட்டவும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்கவும் இந்த பாரம்பரியங்களை நாம் பின்பற்றுகிறோம் என பிரதமர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com/