வசந்தகால சித்திரை வருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் முதல் முறையாக நேற்றைய தினம் கல்லடி கடற்கரையில் வெகு கோலாகலமா பட்டத் திருவிழா இடம்பெற்றது.
மாபெரும் பட்டத் திருவிழாவை மாநகர சபையின் ஆணையாளர் நா. தனன்ஜெயன் ஏற்பாடு செய்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் 22 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பட்டத் திருவிழாவில் பல் சமயக் கலாச்சாரங்களை மதிக்கின்ற வகையில் நான்கு மதங்களையும் அடையாளப்படுத்தி, பாடு மீன் மட்டக்களப்பின் வரலாற்று சின்னங்களை கலை நயத்தோடு வடிவமைத்து போட்டியின் நடுவர்கள் முன்னிலையில் போட்டியாளர்கள் பிரம்மாண்டமான பட்டத்தினை பறக்க விட்டிருந்தனர்.
வானில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் பறந்து கொண்டிருந்த பட்டத்தினை தெரிவு செய்து மூன்று போட்டியாளர்களை நடுவர்கள் தெரிவு செய்தனர்.
வசந்த காலத்தினை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குடும்பங்களோடு பட்ட திருவிழாவினை கண்டுகளிக்க வருகை தந்திருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் யஸ்டினா முரளிதரன் பரிசு பணத் தொகையினை வழங்கி வைத்தார்.
Link: https://namathulk.com/