முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தேசிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அமையப்பெறுகின்றதென மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் உதயசீலன் கற்கண்டு தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
இந்த மாவட்டத்தில் சகல தரப்புக்களின் ஒத்துழைப்போடும் தேசிய தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் இலங்கை துடுப்பாட்ட சங்கத்தினால் அமைக்கப்படுகின்றது என துடுப்பாட்ட சங்க தலைவர் குறிப்பிட்டார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பிலும் இந்த விடயம் தொடர்பில், பேச்சு வார்த்தைகளை நடாத்தியதாக துடுப்பாட்ட சங்க தலைவர் கூறினார்.
இராணுவ பாவனையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடத்தில், மைதானம் அமைப்பதற்கான உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதி காணப்படுவதால் புனரமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதன் அடுத்த கட்டமாக அவர்கள் குறித்த மைதான வளாகத்தை பார்வையிடுவதற்காக எதிர்வரும் மாத்தில் வருகைதர உள்ளதாகவும் துடுப்பாட்ட சங்க தலைவர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com/