வவுனியா – பாவற்குளம், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று காணப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த 33 வயதுடைய கோபிதாசன் என விசாரணையில் தெரிய வந்தது.
இதேவேளை குறித்த இளைஞர் புதுவருட தினமான கடந்த 14ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக் காயங்கள் காணப்படுகின்ற நிலையில் பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com/