உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாக்காளர் அட்டைகளை ஏப்ரல் 20ஆம் திகதி விநியோகிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த தபால் மா அதிபர், மாவட்ட அளவில் வாக்காளர் அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வீட்டிற்கும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் அதைச் செய்ய 29ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை 29ஆம் திகதிக்குப் பின் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடியாது எனவும், அவர் குறிப்பிட்டார்.
மேலும் இதுவரை பெறப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/