மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் நேற்றையதினம் படகு தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 50 பேர் பலியாகினர்.
வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு படகு மூலம் சுமார் 400 பேர் பயணம் செய்தனர்.
பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்புவதற்காக படகில் இருந்து ஆற்றில் குதித்தனர்.
இதன்போது படகு ஆற்றில் கவிழ்ந்த நிலையில் விபத்திற்குள்ளானது
இதேவேளை படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Link: https://namathulk.com/