சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை அழகுசாதனப் பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
மன்னார் – கிராஞ்சி கடற்பகுதியில் நேற்றையதினம் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு தொகை அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 சம்போ பக்கெட்டுகள், 376 அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 75 சவர்க்காரங்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.


Link: https://namathulk.com/
