யாழில், சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 145 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் 6 சந்தேக நபர்கள் கைது.

Aarani Editor
1 Min Read
Turmeric Smuggling

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 145 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், நாட்டை சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, கடந்த 13 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்தின் கடற்படையினர், உடப்புவ கருகப்பனை மற்றும் கடலோரப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

குறித்த படகில் மூன்று பைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்று நாற்பத்தைந்து கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்புடன் நான்குசந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *