சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 100வீத வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்றும், அது நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/