இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை நிராகரித்த ஹமாஸ் அமைப்பு

Aarani Editor
0 Min Read
Hamas

இஸ்ரேல் முன்மொழிந்த இடைக்கால போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் அமைப்பு உத்தியோகப்பூர்வமாக நிராகரித்துள்ளது.

பாலஸ்தீனத்துடன் 45 நாட்களுக்கான போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்த இஸ்ரேல், 10 பணயக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இணக்;கம் தெரிவித்தது.

எனினும் இவ்வாறான பகுதியளவான போர்நிறுத்த ஒப்பந்தங்களை தாங்கள் அங்கீகரிக்கப் போவதில்லை என்றும், அவை பெஞ்சமின் நெத்தன்யாஹ_வின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கானவை என்றும் ஹமாஸ் அமைப்பின் பிரதானப் பேச்சாளர் காலில் அல் ஹய்யா தெரிவித்துள்ளார்.

தாங்கள் நிறைவானதும், முழுமையானதுமான போர் நிறுத்த ஏற்பாட்டையே எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *