உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று (17) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று செயற்பட வேண்டும் எனவும், அநாவசியமாக கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமை ஊடாக பிரதேச சபை ஆட்சியை அமைக்கலாம் எனவும் ரிசாட் பதியுதீன் நம்பிக்கை வெளியிட்டார்.
Link: https://namathulk.com/