பிள்ளையானின் சகா ஒருவர் சி.ஐ.டி யில் சரணடைய தயார் – அமைச்சர் ஆனந்த பரபரப்புத் தகவல்

Aarani Editor
1 Min Read
அமைச்சர் ஆனந்த

கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர் , தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவரர் இதனைக் குறிப்பிட்டார்.

உதய கம்மன்பில – பிள்ளையான் ஆகியோரின் சந்திப்பின்போது பிள்ளையான் அழவில்லை என்றும் அந்த சந்திப்பின்போது அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தான் இதனை வினவியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணையை குழப்பும் வகையில் கம்மன்பில செயற்படுகிறார் என்றும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிள்ளையானுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர் விசாரணைக்கு சுயமாகவே வருகிறார் என்றால் அவர்கள் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *