16 ஆண்டுகளுக்குப் பின்னர் புத்த பகவானின் புனித பல் சின்னத்தின் சிறப்பு வழிபாட்டான ‘சிறி தலதா வந்தனாவ’ இன்று நண்பகல் 12:30 மணிக்கு ஆரம்பமாகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்வில் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணிக்க விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், ஸ்ரீ தலதா வந்தனாவ மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் தலைமை பீடங்களின் வழிகாட்டுதலின் கீழும், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பல் சின்னத்தின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழும் நடைபெறும்.
இன்று (18) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது
தினமும் நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை புனித பல் சின்னத்தை வழிபாடு செய்வதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
