உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (18) புனித வெள்ளியை அனுஷ்டிக்கின்றனர்.
புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கின்ற ஒரு விசேட நாள் ஆகும்.
இது உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும்.
இது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு நிகழ்வை முன்னிட்டு இன்று (17) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதிகபடியான யாத்திரிகர்கள் பிரவேசிக்கக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவ்விடங்களுக்கும் அவ்விடங்களைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
