ஆப்கானிஸ்தானில் இன்று (19) மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.8 மெக்னியூட்டாக இது பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்த தகவல் வெளியாகவில்லை.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/
