அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக போர் வலுப்பெற்று வருகின்றது.
சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 சதவீ வரியை 245 சதவீதம் ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
இந்தநிலையில் கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதன் விளைவாக அமெரிக்க கப்பல் கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனை மாற்றி அமைக்க, சீன கப்பல்களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு துறைமுக கட்டணம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/