பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா என்ற வகையில் நாளந்த அடிப்படைச் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘வெற்றி நமதே – ஊர் எமதே’ மக்கள் பேரணி தொடரின் நுவரெலியா மக்கள் பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல, தொழிலாளர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை தாம் மதிப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான அரசியலில் ஈடுபடும் உரிமையை மதிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மறுமலர்ச்சிக்கான பயணத்தை பலப்படுத்த இணைந்துக் கொண்டுள்ள அனைவருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.
Link: https://namathulk.com/