பொலிஸ் திணைக்களத்திற்குள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய புலமைபரிசில் ஆசிரியர்

Aarani Editor
1 Min Read
Police Inquiry

கடந்த சில நாட்களாக மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியை ஒருவரே இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த ஆசிரியை தனது தனிப்பட்ட பிம்பத்தை உருவாக்க இந்த பொலிஸ் வளங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *