மட்டு சந்திவெளி சந்தைக்கு முன் இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
சந்திவெளி பிரதான வீதியில் நேற்று மாலை 5 மணியளவில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று சம்பவித்திருக்கிறது.
இந்த விபத்தின் போது மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சந்திவெளியை சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் எனும் இளைஞன் ஆவார்.
கடந்த 9 தினங்களுக்கு முன்தான் குறித்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய மற்றைய இளைஞனும் கை கால்களில் பலத்த காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Link: https://namathulk.com/