வத்திக்கானின் அறிவிப்புக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி விடுதலை.

Aarani Editor
1 Min Read
Easter Attack

நாளைய தினம், உலகளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு தினம் அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படவுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை வேதசாட்சிகளாக அறிவிக்கப்படவுள்ளதாக வத்திக்கான் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஈஸ்டர் கொலைக் குற்றச்சாட்டின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின், மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் இன்று பொரளைப் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் விடுதலை செய்யப்பட்டள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இவர்கள் பயணித்த பஸ் வண்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பூரண விசாரணையின் பின், இவர்கள் தொடர்பில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் எதுவும் தென்படாததால் இவர்கள்
விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பச் சுற்றுலா ஒன்றிற்காக தாம் கொழும்பு வந்ததாக இவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவர்கள் இந்த சம்பவத்தின் பின் தமது பயணத்தை இரத்துச் செய்து விட்டு மீண்டும் தமது வீடுகளுக்கு சென்றதாகவும் புலனாய்வு தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *