சென்னையில் மதுபோதையில் காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் பாபி சிம்ஹாவின் தந்தையை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விட்டுவிட்டு, வீடு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளதுடன், 6 வாகனங்கள் சேதம் அடைந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பாபி சிம்ஹாவின் கார் சாரதி புஷ்பராஜ் கைது செய்யப்பட்டதுடன், பாபி சிம்ஹாவின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Link: https://namathulk.com/
