ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது நன்கு குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை இன்றைய தினங்களில் உறுதிப்படுத்தி வருவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
வவுனியா, நெடுங்கேணி கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.
இதன்போது, எமது நாட்டில் முன்னர் இருந்த அரசியல் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மலையகத்திற்கென வெவ்வேறாக இருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
இவ்வளவு காலமும் கிராமங்கள் அபிவிருத்தியடையாமல் இருந்தமைக்கு காரணம் பிரதேச சபைகளுக்கு போதுமான நிதி கிடைக்காமை அல்ல. மாறாக, ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உணர்வுபூர்வமாக செயற்படாமையே காரணமென பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கிராமத்திற்குரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கே பிரதேச சபைகள் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.





Link: https://namathulk.com/