ராகலையில் இருந்து அம்பாறையின் சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த பொலேரோ ரக கெப் வண்டியொன்று இன்று பிற்பகல் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .
ராகலை, உடுவமதுரவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த ஒரு குழுவினர் சியம்பலாண்டுவவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, வலப்பனை, நில்தண்டஹின்ன அம்பன்வெல்ல பகுதியில் அவர்கள் பயணித்த கெப் வண்டியில் திடீரென தடுப்புக்கட்டை (பிரேக்) செயழிழந்ததன் காரணமாக திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/