பெங்களூரு அணியின் அபார பந்துவீச்சு – சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த பஞ்சாப் அணி.

Aarani Editor
1 Min Read
பெங்களூரு

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரப்சிம்ரன் சிங் – பிரியன்ஷ் ஆர்யா 42 ரன்கள் இணைப்பாட்டம் மூலம் ஒரளவு நல்ல அடித்தளம் அமைத்தனர்.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் ரன் குவிக்க முடியாமால் தடுமாறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்துள்ளது.

பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *