எதிர்கால சந்ததியினருக்காக, போரின் வலியையும் வன்முறையையும் அனுபவிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் கூறினார்.
முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றமையினாலேயே, கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாதுகாப்போம் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், மோசடி அல்லது ஊழல் இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு குழுவை பிரதேச தலைமைத்துவத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.
இந்தப் பகுதிகளில் உட்கட்டமைப்பு மட்டுமல்ல, ஏராளமான மனித உயிர்களும் அழிக்கப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இது போன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கவும் அரசாங்கம் செயற்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
Link: https://namathulk.com/
