உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது சமீபத்திய கருத்துகள் எதிர்க்கட்சிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியால் (NPP) வெற்றி பெறாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என தான் கூறியதாகக் கூறப்படும் கூற்றுக்களுக்கு ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளார்.
தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மத்திய அரசால் கவனமாக சேகரிக்கப்படும், நிதி ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படாது என்று மட்டுமே கூறியதாகக் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த கருத்து தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சபைகள் மட்டுமே அவற்றைப் பெறும் என்பதல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசு பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்ப்பது போல, உள்ளூராட்சி மன்றங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
“மத்திய அரசு திருடாமல், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்ந்து திருடும்போது என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பியுள்ள ஜனாதிபதி, மத்திய அரசு வீண்விரயத்தைத் தவிர்க்கும் அதே வேளையில், பிரதேச சபைகள் பணத்தை வீணாக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை ஏன் தெரிந்தே ஒப்படைக்க வேண்டும்? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Link: https://namathulk.com/
