தேர்த்திருவிழாவில் நகைத்திருட்டு – பெண் வேடமிட்ட ஆண் உட்பட நால்வர் யாழில் கைது

Aarani Editor
0 Min Read
Theft

யாழப்பாணம்; – இணுவில் மஞ்சத்தடி முருகன் கோயிலில் தேர்த்திருவிழாவில் பெண்கள் போல் வேடமிட்டு நகைத்திருட்டில் ஈடுபட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணுவில் மஞ்சத்தடி முருகன் கோயில் தேர்த்திருவிழா நேற்று இடம்பெற்றது.

இதன்போது சனநெரிசலைப் பயன்படுத்தி பக்தர்களிடமிருந்து 4 பவுண் நகைகள் திருடப்பட்டு;ள்ளன.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

ததுகவல் அறிந்த பொலிஸார் விரைவாக செயற்பட்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட நால்வரை கைது செய்தனர்.

குறித்த நால்வரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளதுடன் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *