பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறியுள்ளார் .
வத்திகான் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது
வத்திகான் பேராயர் ஃபாரல், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நித்திய இளைப்பாறலை துக்கத்துடன் அறிவித்தார்.
“அன்பான சகோதர சகோதரிகளே, நமது பரிசுத்த தந்தை பிரான்சிஸின் இழப்பை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிகிறேன்” என கூறியுள்ளார்.
நித்திய இளைப்பாறியுள்ள பாப்பரசர் தனது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார் என வத்திகான் தெரிவித்துள்ளது.
வத்திகானில் உள்ள இல்லத்தில் இன்று காலை 7.35 க்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறியுள்ளார் .
Link: https://namathulk.com/