பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில், அவரை கைது செய்த போதே இந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.
ஊழடவ ஆமு18 1 ஆ203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப் படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற துப்பாக்கிகள் ஆகும்.
விலையுயரந்த அமெரிக்கத் தயாரிப்பான ஆ-16 நவீன இயந்திரத் துப்பாக்கியில், ஆ203 கிரனேட் ஏவிகள் பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த துப்பாக்கிகள் ஆகும்.
அரச படையினர் கூட சாதாரணமாகப் பாவிக்காத இந்தவகைத் துப்பாக்கிகள் மட்டக்களப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தில் இருப்பது கண்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கிகள் முன்னைய அரசாகத்தின் காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/