கம்பஹா – கட்டான பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இரவு 7.10 அளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Link: https://namathulk.com/