நாளையதினம் (23) “சிறி தலதா வழிபாடு” நிகழ்வில் பங்கேற்பதற்காக, இன்று (22) மாலை 6 அளவில் 80,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டி நகரில் ஒன்று கூடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில், நாளை காலைக்குள் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை பகல் நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நாளையதினம் பக்தர்கள் (23) வருவதைத் தவிர்த்து, வேறொரு நாளைத் தெரிவு செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Link: https://namathulk.com/