பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவு, உலகவாழ் மக்கள் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
கத்தோலிக்க மக்களின் திருத்தந்தை என்ற அடையாளத்தினூடே, தனது திருச்சபை மக்களைக் கடந்து மனுக்குலத்தின் மாட்சிமைக்கான அவரது எண்ணங்களின் மகத்துவத்தை, கொரோனாப் பெருந்தொற்று காலத்தில் அவர் ஆற்றிய மறையுரையின் சாரத்தில் நாம் அறிந்துகொள்ள முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
கருணையையும், மனிதநேயத்தையும், சமாதானத்தையும் விரும்பிய இந்த யுகத்தின் பேரடையாளமாக மறைந்த திருத்தந்தையின் காலமும், பணிகளும் இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நினைவுப்படுத்தினார்.
மதங்களைக் கடந்த மனிதநேயத்தின் அடையாளமாக, சமாதானத்தின் தூதுவனாக இறைபணி ஆற்றிய கத்தோலிக்க திருச்சபையின் திருந்தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் மறைவின் துயர்சுமந்த மக்களோடு தனும் இணைந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/