இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகப்பூர்வ X தளத்திலேயே இதனை கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
காஷ்மீர் – பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய சுற்றுலாத் தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/
